இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில், "தமிழகம் பல ஆண்டுகளாக இந்து சமய அறநெறிகளின் படி ஆன்மீகத்தையும், அமைதியையும் பொதுமக்களுக்கு போதித்து சமூக சேவை ஆற்றி வருகிறது.
வீரமணியை கைது செய்ய வேண்டும் - இந்து மக்கள் கட்சி புகார்! - k veeramani
சென்னை: இந்து மதத்தையும் இந்து மக்களின் தெய்வங்களை பற்றி அவதூறாக பேசிய திராவிட கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்ய கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில்
இந்நிலையில் சமீபத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி இந்து தெய்வத்தையும், பொள்ளாச்சி பாலியல் வழக்கையும் தொடர்புபடுத்தி பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் மத உணர்வையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
இந்து சமய மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் பேசிய கி.வீரமணியை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்" என்றார்.