சென்னை:திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (63), அதே பகுதியில் இயந்திரங்களை வாடகை விடும் கடையை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம், இவருக்கும், இந்து மக்கள் கட்சி பிரமுகரான மகேஷ் என்பவருக்கும் இடையே தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சங்கரிடம் நட்பாகப் பழகி வந்த மகேஷ், பின்னர் தீர்த்தபாலீஸ்வரர் கோயில் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாகக் கூறி சங்கரை மிரட்டி பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இந்து மக்கள் கட்சியில் சென்னை மாநகர துணைத் தலைவராக தான் இருப்பதாக கூறி மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் வரை சங்கரிடம் மகேஷ் பணம் பறித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி அவ்வை சண்முகம் சாலை சுதந்திர நகர் வழியாகச் சென்று கொண்டிருந்த சங்கரிடம், மேலும் 20ஆயிரம் மாமூல் கேட்டு மகேஷ் மிரட்டியதால், இது குறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்துள்ளார்.