காஷ்மீர் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையை ஆதரிக்கும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ஜனநாயக விரோத செயல்பாட்டுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து சென்னை நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இந்து குழுமத் தலைவர் என்.ராம் பேசியதாவது, "ஊடக சுதந்திரத்தை அரசு பறித்துவிட்டது. ஊடக சுதந்திரத்தை காக்க வேண்டிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அதை படுகுழியில் தள்ளிவிட்டது. பிரஸ் கவுன்சில் தலைவர் முறையாக செயல்படவில்லை.
இந்து குடும்பத் தலைவர் என்.ராம் காஷ்மீரில், ஜனநாயகத்தை நசுக்கி உள்ளனர். அங்கு நடப்பதை உலகம் அறிய அங்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம். நான்கு பேர் கொண்ட குழுவை காஷ்மீருக்கு அனுப்ப பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தற்போது முடிவெடுத்துள்ளது. இது முதல் வெற்றி.
ஊடக சுதந்திரம் ஆரோக்கியமாக இல்லை. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கினால் அதை எதிர்த்து போராடுவோம். பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் செயல்பாடு ஏற்கமுடியாத ஒன்று. அமைப்பின் தலைவர் தனிச்சையாக முடிவெடுத்துள்ளார். இந்த அமைப்பு ஒரு பல் இல்லாத சிங்கமாக, எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பாக இருக்கிறது" என்றார்.