நீண்ட நெடுங்காலமாகவே தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான குரல் ஒழித்துக்கொண்டிருக்கிறது. ஹிந்தி தெரியாததால் கனிமொழிக்கு நடந்ததுபோல் டெல்லி விமான நிலையத்தில் தனக்கும் நடந்தது என இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் தனியார் ஊடகத்தில் வெளியான பேட்டியில் தெரிவித்திருந்தார். இது, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. வெற்றிமாறன் பகிர்ந்த அந்தச் சம்பவம் பலரையும் கொதிப்படையச் செய்தது.
இந்தச்சூழ்நிலையில், 'மெட்ரோ' திரைப்படத்தில் நடித்த நடிகர் சிருஷ் என்பவர் யுவன் சங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை நேற்று (செப்.05) ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை யுவன் சங்கர் ராஜாவும் பகிர்ந்தார். அவர்கள் இருவரும் அணிந்திருந்த டி- சர்ட்டில் 'ஹிந்தி தெரியாது போடா' என்ற வாசகமும்; 'நான் தமிழ்பேசும் இந்தியன்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.