சென்னை:கீழ்ப்பாக்கத்தி இயங்கி வந்த ஹிஜாவு நிதி நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த பொதுமக்களுக்கு 15% வட்டி தருவதாக கூறி ரூ.4,400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 3,34,000 பணம், 448 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ.80 லட்சம் மதிப்புள்ள எட்டு கார்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 162 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.14.47 கோடி முடக்கப்பட்டு, ரூ.75.6 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் ரூ.90 கோடி மதிப்புள்ள 54 அசையும் சொத்துக்கள் கண்டறியப்பட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டள்ளன.
மேலும் அந்த நிறுவனத்தின் இயக்குநரான அலெக்சாண்டர், முகவர்கள் உட்பட மோசடி கும்பல் தொடர்ந்து வெளிநாடுகளில் தலைமறைவாகி விட்டனர். எனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களுக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்து, இவர்களை பற்றி துப்பு கொடுத்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மே மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு நிறுவனத்தை சேர்ந்த 15 நபர்களின் புகைப்படத்த வெளியிட்டிருந்தனர்.
இதையும் படிங்க:ஹிஜாவு நிதி மோசடி வழக்கில் சிக்கிய ஏஜென்ட் தற்கொலை