தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விரிவாக்கப்பணி: நில எடுப்புப்பணிகள் முழுமையாக முடித்த பிறகு தான் டெண்டர் கோரப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

சாலையை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் சரி, புறவழிச்சாலை அமைப்பதாக இருந்தாலும் சரி நில எடுப்புப் பணிகள் முழுமையாக முடித்த பிறகு தான் டெண்டர் கோரப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சாலை விரிவாக்க பணி: நில எடுப்பு பணிகள் முழுமையாக முடித்த பிறகு தான் டெண்டர் கோரப்படும் - அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு
சாலை விரிவாக்க பணி: நில எடுப்பு பணிகள் முழுமையாக முடித்த பிறகு தான் டெண்டர் கோரப்படும் - அமைச்சர் எ.வ.வேலுநெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு

By

Published : Apr 28, 2022, 7:22 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல்.28) கேள்வி நேரத்தில் பேசிய, ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மணி, "ஓமலூர், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் சாலை இரு வழிச்சாலையாக உள்ளது. அதை நான்கு வழிச்சாலையாக மாற்ற டெண்டர் விடப்பட்டு 1 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் பணி தொடங்கப்படவில்லை. அது எப்போதும் தொடங்கப்படும்’’ என கேள்வி எழுப்பினார்.

ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மணி

இதற்குப் பதில் அளித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, "சாலைகள் காலதாமதம் ஆவதற்குச் சாலைகளை விரிவுபடுத்தும்போது சாலைகள் ஓரங்களில் இருக்கும் மின் கம்பங்களை அகற்ற வேண்டியிருக்கிறது. மரங்கள் அதிகம் இருந்தால் வெட்டுகின்ற பணி நடக்கும். நிலம் எடுக்கும் பணி போன்றவையால் தான் சாலைகள் விரிவுபடுத்துவதில் தாமதம் ஆகிறது.

சாலை விரிவாக்கப் பணி: நில எடுப்புப் பணிகள் முழுமையாக முடித்த பிறகு தான் டெண்டர் கோரப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

எனவே, தான் எந்த சாலையை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் சரி, புறவழிச்சாலை அமைப்பதாக இருந்தாலும் சரி நில எடுப்பை முழுமையாக முடித்த பிறகு தான் டெண்டர் விட வேண்டும் என முதலமைச்சர் எங்கள் துறைக்கு உத்தரவு இட்டுள்ளார். ஏற்கெனவே இருந்த அரசு 50 விழுக்காடு நில எடுப்புப் பணிகள் முடிந்தாலே டெண்டர் விடலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால், அந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு சாலைப்பணிகள் மெத்தனமாக இருக்கிறது. ஆனால், இந்த அரசை பொறுத்தவரை முழுமையாக நில எடுப்புப் பணிகள் முடிந்தால் தான் டெண்டர் விடப்படும். ஓமலூர் சாலைப்பணிகள் விரைவில் நடக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த இரண்டு ஆண்டுகளில் 316 துணை மின் நிலையங்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

ABOUT THE AUTHOR

...view details