நெடுஞ்சாலைத் துறை பணி நியமனத்தில் முறைகேடு: அரசு அறிக்கை அளிக்க உத்தரவு - தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி
சென்னை: நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் 2016ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் எம்.எல். ரவி பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்தத் தேர்வில் தேர்வான 10 பேரின் தேர்வை ரத்துசெய்ய அரசு செயலாளர் பரிந்துரை செய்திருந்ததாகவும், ஆனால், நெடுஞ்சாலைத் துறை இயக்குநர் எட்டு பேரின் தேர்ச்சியை மட்டுமே ரத்துசெய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.