தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022-23 : சில சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு வேளான் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022-23 : சில சிறப்பம்சங்கள்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022-23 : சில சிறப்பம்சங்கள்

By

Published : Mar 19, 2022, 9:36 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசின் வேளான் பட்ஜெட் 2022-23 வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உள்ள சிறப்பம்சங்கள் கீழ் வருமாறு:

  • இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.71 கோடி மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.
  • சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு விதை முதல் விற்பனைக்கு ரூ.152 கோடியில் உதவி.
  • சூரியகாந்தி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தி எண்ணெய் வித்துக்களை ரூ.29.7 கோடிக்கு ஊக்குவித்தல்.
  • ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்.
  • உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க ரூ.5 கோடி.
  • கரும்பு சாகுபடிக்கு உதவி - ரூ.10 கோடி.
  • தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக ரூ.27.51 கோடி.
  • பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் (Vertical garden) போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி.
  • பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி.
  • பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி.
  • பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தைகளில் மாலையில் சிறுதானியங்கள், பயறுவகைகளை விற்பனை செய்ய அனுமதி.
  • பொது, தனியார் பங்கேற்பு முறையில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 'மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள்' அமைத்து, அருகாமையில் உள்ள மாநில வியாபாரிகள் தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வசதி செய்து தரப்படும்.
  • மாநில அளவிலான 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேலாண்மை மையம்' அமைத்து வணிக நடவடிக்கைகளுக்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் 4,964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 80 கோடி.

ABOUT THE AUTHOR

...view details