சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சந்திரகாந்தன்-கவுரி தம்பதிக்கு ஹேமாவதி (17)என்ற மகள் உள்ளார். தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் நேற்று ஹேமாவதி வழக்கம் போல தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். பிறகு வீடு அருகில் உள்ள டியூசன் மையத்திற்கு சென்றார்.
பின்னர் மாணவி வீட்டிற்குத் திரும்பினார். சிலிண்டர் போடுவதற்காக ஊழியர் வந்து கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. இதையடுத்து அருகில் வசிக்கும் உறவினர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஹேமாவதி இருந்தார்.
சென்னையில் 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவி தூக்கிட்டுத் தற்கொலை - HSC student
சென்னையில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்குத் திரும்பிய 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிறகு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்தபோது ஹேமாவதி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிய வந்தது. தகவல் அறிந்து அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி உடலைப் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை கடிதம் ஏதேனும் மாணவி ஹேமாவதி எழுதி வைத்துள்ளாரா? என காவல் துறையினர் ஹேமாவதி வீட்டை சோதனை செய்தனர். ஆனால், எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ய சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வலிப்பு வந்தது போல் ஆக்டிங் செய்த திருடர்கள் - ஆக்ஷன் காண்பித்த பொதுமக்கள்!