தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வேந்தரும், இணை வேந்தரும்.... இணைந்து செயல்படாவிட்டால் உயர்கல்வி பாதிக்கும்’ - பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை - பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

பல்கலைக் கழகங்களின் வேந்தரும், இணை வேந்தரும் இணைந்து செயல்படாவிட்டால் தமிழ்நாட்டில் உயர்கல்வி பாதிக்கும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காந்திராஜ்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காந்திராஜ்

By

Published : Jul 13, 2022, 9:32 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநரும், இணை வேந்தராக உள்ள உயர்கல்வித் துறை அமைச்சரும் இணைந்து செயல்படாவிட்டால் தமிழ்நாட்டில் உயர்கல்வி சூழல் பாதிக்கும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் காந்திராஜ், “மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சரை, ஆளுநர் மாளிகை உரியமுறையில் கலந்தாலோசிக்காமல் விட்டது தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காந்திராஜ்

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பல்கலைக்கழகங்களில் வேந்தராகவுள்ள தமிழ்நாடு ஆளுநரும் இணைவேந்தராக உள்ள உயர் கல்வித் துறை அமைச்சரும் இணைந்து செயல்படாமல் போனால் தமிழ்நாட்டில் உயர்கல்வி சூழல் வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - பட்டங்களை வழங்கி பாராட்டிய ஆளுநர் ரவி

ABOUT THE AUTHOR

...view details