தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு உயர்கல்வித் துறை சார்பில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, "தமிழ்நாடு அரசு ஆறு பல்கலைக்கழகங்களுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அவற்றில் முதல்கட்டமாக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆராய்ச்சி படிப்புகளுக்கு வழங்கவேண்டிய நிதியினை வழங்க கால தாமதமானாலும் தமிழ்நாடு அரசு முன்கூட்டியே வழங்கியுள்ளது.
யுஜிசி நெட் தேர்வு முடித்தாலும் பிஎச்டி படிப்பு அவசியமாகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி அனைத்து கல்லூரி விரிவுரையாளர்கள் ஆராய்ச்சி பட்டபடிப்பை முடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது முடிக்காமல் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு மீண்டும் செட், நெட் தேர்வினை நடத்துவதற்கு உயர்கல்வித் துறை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளது.