தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்! - higher education minister ponmudi warns private colleges

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேர்வுக் கட்டணம் செலுத்தத் தவறும் தனியார் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து செய்யப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

higher-education
higher-education

By

Published : May 20, 2021, 5:26 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசியதாவது:'முந்தைய காலங்களில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அலுவலர்களை அழைத்து ஆலோசனை நடத்தினேன். மாணவர்களிடம் இருந்து பெற்ற தேர்வுக் கட்டணத்தை 23 தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்திடம் செலுத்தாமல் தேர்வு நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த 23 கல்லூரிகளும் வரும் திங்கள் கிழமைக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறும்பட்சத்தில் கல்லூரிக்கான இணைப்பு ரத்து செய்யப்படும். பல்கலைக்கழகத்துடன் இணைப்பு ரத்து செய்யப்பட்டால் அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்த முடியாது.

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணம் அளித்தால் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றப் புகார் வந்துள்ளது. கடந்த காலங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு குழு அமைத்து, பணி நியமனங்கள் நடைபெற்றன. அதிலும் முறைகேடுகள் உள்ளதாகப் புகார்கள் வந்ததன் அடிப்படையில் அக்குழு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

பணி நிரந்தரத்திற்காக பணம் அளித்து யாரும் ஏமாற வேண்டாம்; பணம் பெறும் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். கவுரவ விரிவுரையாளர்கள் முறைப்படுத்தி நியமனம் செய்யப்படுவார்கள். தகுதி, முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே நியமனம் நடைபெறும். திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளன.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

எம்.ஏ சமூக அறிவியல் துறையின் பாடப் புத்தகத்தில் பல தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, துறைத் தலைவர்கள், அனுமதித்த பல்கலைக்கழக வேந்தர்களை விசாரித்து காரணமானவர்கள் மீது குழு அமைத்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக் கொள்கை என்பது மாநில உரிமைகளின் தலையீடு. அதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை நுழையாமல் இருக்க, துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும். சூரப்பா மீது விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்தபின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'என்றார்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் இளநிலை மருத்துவம் படித்த மாணவர்கள்: உள்ளிருப்பு பயிற்சி மருத்துவத்திற்கு சலுகை!

ABOUT THE AUTHOR

...view details