சென்னை: பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கான தரவரிசையில் பட்டியலில் பல அரசு பள்ளி மாணவர்கள் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் எந்த மாணவரும் விடுபடவில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயங்குனரகத்தில் அமைச்சர் பொன்முடி ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேற்று முதல் சிறப்பு கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
25ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு
முதல் முறையாக பொறியியல் படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 25ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
பலர் அரசு பள்ளியில் பயின்றதாகவும், தங்களது பெயர் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெறவில்லை எனவும் கூறுகின்றனர். ஆனால் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை அரசு பள்ளியில் படித்திருந்தால் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீட்டில் இடம்பெற முடியும்.
15 ஆயிரத்து 660 மாணவர்கள் தகுதியானவர்கள்