தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எப்போது சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து? அமைச்சர் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகத்திற்கான அந்தஸ்தினை பெறுவதற்கான நிதி அளிப்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அறிவிப்போம் என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

kp anbalagan

By

Published : Sep 20, 2019, 4:17 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 18ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றுவருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இணையத் தமிழை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் பாண்டியராஜன் சிறப்புரை வழங்கினார். தமிழிணைய மாநாட்டு மலரையும், தமிழ் இணைய பல்கலைக்கழகம் உருவாக்கியிருந்த செயலியையும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், “பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வமில்லை என கூறுகிறீர்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. இந்த ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதேபோல், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் அதிகளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். வழக்கம்போல் மாணவர்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

கே.பி. அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்கள் சீர்மிகு பல்கலைக்கழகம் அந்தஸ்து வேண்டும் என விண்ணப்பம் செய்துள்ளது. அதில் முதல்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் அந்தஸ்து அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனை எவ்வாறு வழங்குவார்கள் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

அந்த ஆய்வு முடிந்த பின்னர் அதுகுறித்து அறிவிக்கப்படும். தமிழ்நாடு அரசு உயர்கல்வியில் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு எப்பொழுதும் தயாராக உள்ளது. எனவே எந்த விதத்திலும் இவர்களுக்கான நிதி வழங்குவதில் தடையில்லை. சீர்மிகு பல்கலைக்கழகம் அந்தஸ்து பெறுவதில் உள்ள பயன்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தகவல்கள் அளிக்கப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details