இதுதொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆரம்பத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. அவரது சிடி ஸ்கேன் முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தது. இருப்பினும், அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.
அமைச்சர் அன்பழகனுக்குக் கரோனா உறுதி! - chennai district news today
![அமைச்சர் அன்பழகனுக்குக் கரோனா உறுதி! anbalakan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7834266-159-7834266-1593522388615.jpg)
17:21 June 30
சென்னை: உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டதையடுத்து, இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல், இருமலுடன் சிகிச்சைபெற்றுவருகிறார். அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த இரு வாரத்திற்கு முன்பு அவருக்குக் கரோனா தொற்று இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதுகுறித்து அமைச்சர் தரப்பில் மறுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விழுப்புரம் சிறுமி எரித்துக்கொலை: குண்டர் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு!