தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 5, 2021, 2:01 PM IST

ETV Bharat / state

'உயர்கல்வி நிறுவனங்கள் வாரத்தில் 6 நாள்கள் செயல்படும்'

சென்னை: கரோனா தொற்று பரவலுக்குப் பின்னர் திறக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்கள் வாரத்தில் 6 நாள்கள் செயல்படும் என உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்கள்
உயர்கல்வி நிறுவனங்கள்

கரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் திறக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்கள் வரும் 8ஆம் தேதிமுதல் தொடங்க உள்ள நிலையில் வாரத்தில் ஆறு நாள்கள் செயல்படும் என உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், "கரோனா காலகட்டத்திற்குப் பிறகு கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏழாம் தேதி, முதல்கட்டமாக இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் வரும் 8ஆம் தேதிமுதல் இளங்கலை, முதுகலை படிப்புகளைக் கற்பிக்கும் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதனடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டில் வாரத்தில் ஆறு நாள்கள் இனிமேல் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதேபோல, வருகிற 8ஆம் தேதிமுதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details