சென்னை:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வித்துறையின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதித்து உயர் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வித்துறை துணைச்செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும். பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும்’ என அதில் கூறியுள்ளார்.