தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை கடந்த 2 மாதங்களுக்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்தார். பின்னர் சட்டமாகவும் அரசிதழில் வெளியானது.
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தற்காலிகமானது என தகவல் பரவியதற்கு, சட்டப்பேரவையில் நிறைவேற்றுப்பட்டுவிட்டதால் இச்சட்டம் நிரந்தரமான தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.