தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிதாக கட்டப்பட்ட கல்லூரி கட்டடம் - காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்

சென்னை: உயர்கல்வித்துறை சார்பில் 185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரிகளின் கட்டடங்களை, முதலமைச்சர் பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

பழனிசாமி

By

Published : Jun 25, 2019, 3:49 PM IST

உயர்கல்வித் துறை சார்பில் பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ஒன்பது கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக 24 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், நூலகம், கருத்தரங்கக்கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், கிருஷ்ணகிரியில் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, அரசு மகளிர் கலைக் கல்லூரி ,பர்கூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியிலும், சென்னை- சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திலும், டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பத்து கல்லூரிகளில், 185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

இதன்பின் பேசிய அவர், தமிழ்நாட்டை அறிவுசார், தொழில்நுட்ப கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்று, வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக இந்த எட்டு ஆண்டுகளில் 56 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கலை, அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 19 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை தொடங்கியுள்ளோம்.

மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 48.6 விழுக்காடுகளை பெற்று இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details