தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றம் - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் விற்பனை
டாஸ்மாக் விற்பனை

By

Published : Dec 8, 2021, 11:37 AM IST

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, பகல் 12 மணிமுதல் இரவு 10 வரை மாற்றி டிசம்பர் 2ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "தொழில் தகராறு சட்டத்தின்படி வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாள்கள் முன்பு அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று விதி உள்ளது.

எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது சட்டவிரோதமான ஒன்று. அதனால் இந்த அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். மேலும் இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம் என்பதால், பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் ஆறு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆவது வாரத்திற்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றம்... உயர் நீதிமன்றத்தில் வழக்கு...

ABOUT THE AUTHOR

...view details