தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்சோ, சிறார் வழக்கு விவகாரம்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு! - காவல்துறைக்கு நீதிமன்றம் பாராட்டு

தென் மாவட்டங்களில் போக்சோ மற்றும் சிறார் சம்பந்தப்பட்ட குற்றங்களில் முறையான விசாரணைக்கு பின்பே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை காவல்துறை முறையாக அமல்படுத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Highcourt
Highcourt

By

Published : Dec 16, 2022, 7:46 PM IST

சென்னை: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரத்தில், மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் சிதம்பரம் நகர காவல் நிலைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், சிறார் குற்றங்களை கையாள்வது குறித்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், என்.ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் விவகாரத்தில் காவல்துறை செயல்பாடுகள் குறித்த அறிக்கையை, நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சந்துரு தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதிகள், தென் மாவட்டங்களில் போக்ஸோ வழக்குகள் மற்றும் சிறார் தொடர்புடைய குற்றங்களில் முறையான விசாரணை முடிந்த பின்பே வழக்கு பதிவு செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது - இதனால் தென் மாவட்டங்களில் போக்சோ மற்றும் சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தலாமே? என காவல்துறைக்கு ஆலோசனை வழங்கினர். பின்னர், குற்ற சம்பவங்களில் சிறார்களை கையாள்வது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என். ரவியை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details