திமுகவின் விவசாயிகள் அணிச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "காவிரியிலிருந்து திறந்துவிடப்படும் நீர் கடைமடைப் பகுதிக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் இடையே காவிரி நீர் திசை மாற்றப்படுகிறது.
அந்தப் பகுதிகளில் போலியான நீரேற்று பாசன விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டு, அதிக திறன் கொண்ட மோட்டார்களைப் பயன்படுத்தி நீர் உறிஞ்சப்படுகிறது. அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல், வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.