தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமீறல் கட்டடங்கள் உருவாக அரசு அலுவலர்கள் தான் காரணம்: உயர்நீதிமன்றம் - விதிமீறல் கட்டடங்கள் உறுவாக அரசு அலுவலர்கள் தான் காரணம்

சென்னை: அடுக்கடுக்கான விதிமீறல் கட்டடங்கள் உருவாக ஆக்கிரமிப்பாளர்களை விட, அரசு அலுவலர்கள் தான் முக்கிய காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விதிமீறல் கட்டடங்கள் உறுவாக அரசு அலுவலர்கள் தான் காரணம்
விதிமீறல் கட்டடங்கள் உறுவாக அரசு அலுவலர்கள் தான் காரணம்

By

Published : Jun 21, 2021, 5:45 PM IST

சென்னை மாநகராட்சியின் 5வது மண்டலமான ராயபுரத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமானங்கள் குறித்து வழக்கறிஞர் ருக்மாங்கதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ராயபுரத்தை போல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. 5-வது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் வழங்கி இருந்தது.

இந்த வழக்கு இன்று (ஜுன்.21) மீண்டும் தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராம்மூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது.

கரோனா இரண்டாவது அலை காரணமாக அவகாசம் தேவைப்படும் என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், அரசுக்கு 9 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும் விதிமீறல் கட்டுமான விவகாரத்தில், அரசு அலுவலர்களுக்கும் தொடர்புள்ளது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details