தமிழ்நாடு

tamil nadu

வனத்தைப் பாதுகாப்பது அவசியம் - உயர் நீதிமன்றம்

By

Published : Sep 21, 2021, 8:26 PM IST

மனித குலத்திற்குப் பயனளிக்கும் வனத்தைப் பாதுகாப்பது அவசியம். வனப்பகுதி ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றும் நடவடிக்கையைத் தொடரலாம் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வனத்தை பாதுகாப்பது அவசியம்
வனத்தை பாதுகாப்பது அவசியம்

சென்னை:நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர், மருத்துவர் கவிதா செண்பகம். இவர் வனப்பகுதியை ஆக்கிரமித்து ரிசார்ட் கட்டி வருவதாக, கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் எனவும், வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

வன நிலம் ஆக்கிரமிப்பு

இந்த வழக்குத் தலைமை நீதிபதி அமர்வில் இன்று (செப்.21) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவிற்கு வன நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அவற்றை அகற்றி நிலத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனுதாரர் பிரபாகரன் தொடர்ந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நடுவட்டம் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

வனத்தைப் பாதுகாப்பது அவசியம்

இவற்றைப் பதிவு செய்த நீதிபதிகள், 'உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகும் தமிழ்நாட்டில் 16 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு வன நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. மனிதக் குலத்திற்குப் பயனளிக்கும் வனத்தைப் பாதுகாப்பது அவசியம்.

வனப்பகுதி ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றும் நடவடிக்கையைத் தொடரலாம்' என அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க:கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

ABOUT THE AUTHOR

...view details