தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன நுழைவு வரி விவகாரத்தில் பிடியாணை உத்தரவு ரத்து - உயர் நீதிமன்றம் - சென்னை அண்மைச் செய்திகள்

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தப்பட்டதையடுத்து, தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

By

Published : Sep 8, 2021, 6:50 PM IST

சென்னை:சென்னையைச் சேர்ந்த கிராந்தி கன்ஸ்ட்ரக்சன், ஸ்ரீ முருகன் எர்த் மூவர்ஸ் என்ற 2 தனியார் நிறுவனங்கள் கட்டடங்களை இடிப்பது, இடர்பாடுகளை அகற்ற பயன்படுத்துதல் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்தும் வாகனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர்.

இந்த வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடைகோரி, 2008ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இது தொடர்பான வழக்கு கடந்த முறை உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, நுழைவு வரி செலுத்தக்கூடிய நிலையில் நிறுவனங்கள் இல்லை என மனுதாரர் தரப்புகள் தெரிவித்தன.

பிடியாணை உத்தரவு ரத்து

இதனையடுத்து இரு தனியார் நிறுவனங்களின் இயக்குநர்களையும், செப்டம்பர் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு இன்று (செப். 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்திவிட்டதாகத் தெரிவித்தார். இதனையடுத்து இரு தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை ரத்துசெய்து, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: குழந்தையின் தலையுடன் நாய் - மதுரையை அதிரவைத்த சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details