சென்னை: 2018ஆம் ஆண்டு கடலூரின் பண்ருட்டியில் உள்ள செட்டிப்பட்டறை ஏரி, களத்துமேடு ஏரி ஆகிய நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கானது பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 23) விசாரணைக்கு வந்தது.
அப்போது செட்டிப்பட்டறை ஏரியில் கட்டப்பட்ட 138 வீடுகள் அகற்றப்பட்டன என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து களத்துமேடு ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் தரும்படி அலுவலர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அப்போது அலுவலர்களின் செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.