2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த ஜனவரி மாதம் இரண்டு நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தனியார் நிறுவங்களின் விவரங்களை ஆராயும் வகையில் விதிகளை வகுக்கக் கோரி காஸ்கேட் என்ற நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
மேலும், 2015இல் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராயததால், பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொழில்களாக மாறி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், முதலீட்டாளர் மாநாடு நடத்தி முடித்தது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.