தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபாத்திமா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! - cbi inquiry in fathima latheef death

சென்னை: ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரிய வழக்கை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

high court of madras post burn the case which is demand cbi inquiry in fathima latheef death

By

Published : Nov 22, 2019, 12:39 PM IST

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் நவம்பர் 9ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியின் இந்த மரணம் ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த மன அழுத்தத்தில் ஃபாத்திமா இருந்ததாக அவரது விடுதிக் காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடியில் படித்த 5 மாணவர்கள் இதே போல சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், ஃபாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ? அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிடக் கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் அஸ்வத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவி மரணம் தொடர்பான வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.

மத்திய குற்றப்பிரிவுக் குழுவில், சிபிஐ-யில் பணியாற்றிய அனுபவம் உள்ள அதிகாரிகள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:ஐஐடி மாணவி ஃபாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டவர்கள் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details