தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறுமுகசாமி ஆணையம் ஏன் 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யக்கூடாது? - உயர் நீதிமன்ற நீதிபதிகள் - ஜெயலலிதா இறப்பு

Arumugasamy commission
Arumugasamy commission

By

Published : Jul 2, 2021, 11:54 AM IST

Updated : Jul 2, 2021, 2:23 PM IST

11:45 July 02

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அதுசம்பந்தமாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது.
 ஏன் 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யக்கூடாது?
இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் கூறி, ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி, தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, விசாரணையை மூன்று மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது? என்பது குறித்து ஆறு வாரங்களில் விளக்கமளிக்க தமிழ் நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தது
 

இதையும் படிங்க:  ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளுக்கான வாய்ப்புகள் என்ன?

Last Updated : Jul 2, 2021, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details