ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொது நல வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், "வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா, எத்தனை யானைகள் உள்ளன எனப் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக.5) விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 30 யானைகள் கோயில்களில் வளர்க்கப்படுவதாகவும், முறையான இடத்தில் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் குறுக்கிட்டு, "30 மட்டும் என்பது தவறு. மொத்தமாக 34 யானைகள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. பாதிக்கு மேற்பட்ட யானைகளுக்கு பாகன்கள் இல்லை. அவற்றின் கால்கள் கட்டப்பட்டு 8 மணி நேரத்திற்கும் மேலாக நிற்கவைக்கப்படுவதாகவும், ஸ்ரீரங்கம் கோயில் யானைக்காக பிரத்தியேக இடத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோர்க்கை வைத்தார்.
இயற்கையான வனப்பகுதியில் யானைகளை பராமரிக்கலாமே