தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்கள் துணைத்தேர்வு எழுத அனுமதி மறுப்பு - கேந்திரிய வித்யாலயாவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - கேந்திரிய வித்யாலயா சங்கதன்

தமிழ்நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில், 11ஆம் வகுப்புத் தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்த கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kendriya vidyalaya
தமிழகம்

By

Published : May 2, 2023, 8:46 PM IST

சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ஆம் வகுப்புத் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி ஏராளமான மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் இன்று(மே.2) நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவிக்கு, துணைத் தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2018ல் அனுமதி வழங்கியுள்ளதாக, மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவு, குறிப்பிட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டதாகவும், அந்த உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளதாகவும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்ல வேண்டும், இது அவர்களின் எதிர்காலம் என்பதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11ஆம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒரு முறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 12,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி வெளியிடப் பணிகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details