தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மீது வீடு புகுந்து தாக்குதல்: கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு - chennai district news

சென்னை: ராயபுரம் அருகே வழக்கறிஞரை தாக்கிவிட்டு, அவரது வீட்டை சூறையாடிய கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மீது வீடு புகுந்து தாக்குதல்
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மீது வீடு புகுந்து தாக்குதல்

By

Published : Nov 3, 2020, 3:33 PM IST

சென்னை ராயபுரம் அர்த்தன் பகுதியைச் சேர்ந்தவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விவேகானந்தன். நேற்று (நவ.2) இரவு சுமார் 8 மணியளவில் இவர் மனைவி, இரண்டு மகன்களுடன் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது வழக்கறிஞர் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அங்கிருந்த கார், இருசக்கர வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.

பின்னர் வழக்கறிஞர் விவேகானந்தனையும் தாக்கிவிட்டு சென்றனர். உடனே வழக்கறிஞர் ராயபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சி அடிப்படையில் வழக்கறிஞரை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண் மருத்துவர் மீது கொலைவெறி தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details