தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் விளைப்பொருள்களை விற்பனை செய்ய உதவி எண்கள் அறிவிப்பு! - helpline numbers announced for farmers to sell vegetables

சென்னை: விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களை விற்பனை செய்ய உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

helpline numbers announced for farmers to sell vegetables
helpline numbers announced for farmers to sell vegetables

By

Published : Apr 13, 2020, 4:28 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் விவசாயப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சரக்குப் போக்குவரத்துக்கு எந்தவித தடையும் இல்லாமல் வழக்கம் போல செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது.

இருப்பினும் பல இடங்களில் பாடுபட்டு உழைத்து விளைவிக்கப்பட்ட பொருள்களைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களை விற்பனை செய்ய உதவி எண்களை அரசு அறிவித்துள்ளது. உதவி எண்களின் விவரம் கீழ்க்கண்ட புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட உதவி எண்கள்



இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”இந்தச் சோதனையான காலத்தில் விளைப்பொருள்களை விற்க விவசாயிகள் அடையும் சிரமங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. விவசாயிகளின் இன்னல்களை நீக்க அரசு என்றும் விவசாயிகளின் உற்ற தோழனாக துணை நின்று உதவி செய்யும்” என தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details