தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பாதுகாக்க உதவி எண் வெளியீடு!

சென்னை: கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பைப் பூர்த்தி செய்ய இலவச தொலைபேசி எண் 1098-யை சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வெளியிட்டுள்ளது.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பாதுகாக்க உதவி எண் வெளியீடு
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பாதுகாக்க உதவி எண் வெளியீடு

By

Published : May 25, 2021, 6:12 PM IST

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சென்னை மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் பெற்றோரின் குழந்தைகள், உணவு, உறைவிடம் தேவைப்படும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், ஆற்றுப்படுத்துதல், உளவியல் ஆலோசனை தேவைப்படும் குழந்தைகள் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் இருக்கின்ற குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை பூர்த்தி செய்ய சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இலவச தொலைபேசி எண் 1098-யை வெளியிட்டுள்ளது.

இதுபோன்று சூழ்நிலையில் உள்ள குழந்தைகளைக் கண்டால் கீழ்க்காணும் முகவரி, எண்களில் தொடர்பு கொண்டு குழந்தைகள் நல குழுவிற்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என பொதுமக்களுக்கு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சித்தலைவர் / தலைவர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரியநாராயண சாலை, ராயபுரம், சென்னை-13. மின்னஞ்சல்: dcpschennai2@gmail.com 9944290306/044-25952450.

இலவச உதவி எண்கள்

1. குழந்தைகளைப் பாதுகாக்க உதவும் இலவச தொலைபேசி எண்: 1098

2. குழந்தைகள் நலக் குழு (வடக்கு மண்டலம்) தலைவர் - 9840135503

3. குழந்தைகள் நலக் குழு (தெற்கு மண்டலம்) தலைவர் - 9840083620

4. குழந்தைகள் நலக் குழு (மத்திய மண்டலம்) தலைவர் - 9841889069

இதையும் படிங்க: பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்: 5 பேருக்கு சம்மன்

ABOUT THE AUTHOR

...view details