தமிழ்நாட்டில் பெருகிவரும் வாகன விபத்தை தடுக்க இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணியும் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது தலைக்கவசம் அணியாமல் பயணித்தது தொடர்பாக ஆறு நாட்களில் 21 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஸ்வைபிங் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்கும் முறையை வங்கிகளுடன் இணைக்கும் பணி முடிந்ததும் தமிழ்நாடு முழுவதும் ஸ்வைபிங் இயந்திரம் முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.