Chennai Traffic: சென்னை:தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் அடுத்தடுத்த நாட்களில் போகி, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் வசிக்கும் மக்கள், சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக நேற்று முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதற்காக சிறப்பு பேருந்து நிலையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்று முன்தினம் முதல் இன்று (ஜன.13) வரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். மேலும், சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 700 பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதில், நேற்று முன்தினத்திலிருந்து தற்போது வரை 27 ஆயிரம் பயணிகள் செய்து உள்ளனர். இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 10 ஆயிரம் பேர் அதிகமாக பயணித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.