சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்லும் நிலையில் திருச்சி மண்டல ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தீபாவளி பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், "தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர்கள் பாதுகாப்பாக பயணிக்க ரயில்வே காவல் துறையினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் பேட்டி ரயில்களில் பட்டாசு கொண்டுசென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மோப்ப நாய் உதவியுடன் ரயில்களில் சோதனை செய்துவருகிறோம். 24 மணி நேரமும் காவலர்கள் ரயில்களை சோதனை மேற்கொண்டுவருகின்றனர். பெண்கள் பாதுகாப்புக்காக பெண் காவலர்கள் சீருடை அணியாமல் உள்ளனர்.
முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு 1512 எண்ணில் புகார் அளிக்கலாம். அந்தப் புகார் மீது இரண்டு நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் புகார் அளிக்க 9445464761 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து!