தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை: 11,797 சிசிடிவி, 40,910 காவலர்கள், பாதுகாப்புப் பணியில் ட்ரோன் - heavy security arrangements have been made in tamil nadu for urban local body Election counting

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 11,797 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் ட்ரோன்களும் பயன்படுத்த இருப்பதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்  வாக்கு எண்ணிக்கை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

By

Published : Feb 21, 2022, 10:23 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெறவுள்ளது.

சென்னையில் 11 மையங்கள், ஆவடியில் நான்கு மையங்கள், தாம்பரத்தில் ஐந்து மையங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 279 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற தமிழ்நாடு காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

குறிப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு காவல், ஆயுதப்படை, சிறப்புக் காவல் படை என மூன்றடுக்கு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், முக்கியமான இடங்களிலும் சந்திப்புகளிலும், அதிரடிப்படையினர், அதிவிரைவுப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 11,797 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் ட்ரோன்களும் பயன்படுத்த இருப்பதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் பணியில் ட்ரோன்

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 6782 ஊர்காவல் படை உள்பட 40,910 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சினைகள் நடப்பதைத் தடுக்க 60 ஆயிரம் காவலர்கள் ரோந்துப் பணியிலும், கண்காணிப்புப் பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் காவலர்கள்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு வருபவர்கள் அடையாள அட்டை, மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

இதற்காகப் பயிற்சிபெற்ற ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாலை முதலே ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி அசம்பாவிதங்களை முன்கூட்டியே தவிர்க்குமாறு காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உயர் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

இதையும் படிங்க: கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை; ஆனால் தேர்தல் முடிவுகள்...?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details