தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

சென்னை:தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

regional meteorological centre

By

Published : Oct 27, 2019, 9:38 PM IST

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, அதே பகுதியில் நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதி மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details