தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை எதிரொலி - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு

சென்னை: தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தென் மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர்

By

Published : Oct 21, 2019, 6:58 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு பெரும்பாலன இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி,கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாயப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றரிக்கையில், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ்.அலுவலர்கள் மழை நிலவரங்கள் , அணைகளின் நிலவரங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யவேண்டும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபடவேண்டும். மேலும் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 9 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details