தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.