சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில், " வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (டிசம்பர் 5) இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேலும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 6, 7 நிலவரம்மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் (டிசம்பர் 6) லேசான மழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.டிசம்பர் 8 நிலவரம்தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 8ஆம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.