தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம் அறிவிப்பு..! - தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Weather Forecast: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை (அக்.17) திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம்
சென்னை வானிலை மையம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 6:59 PM IST

சென்னை: தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (அக்.17) திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பு:திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பதிவு விபரம்: பெரியகுளம் 14 செ.மீ மழைப்பதிவு, (தேனி) பெரியகுளம் AWS (தேனி) 12 செ.மீ மழைப்பதிவு, பேரையூர் (மதுரை) 10 செ.மீ மழைப்பதிவு, சோத்துப்பாறை (தேனி), கமுதி (ராமநாதபுரம்), விருதுநகர் (விருதுநகர்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 9 செ.மீ மழைப்பதிவு, திருச்சுழி (விருதுநகர்) 8 செ.மீ மழைப்பதிவு, மணமேல்குடி (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வைகை அணை (தேனி), மிமிசல் (புதுக்கோட்டை), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), திருச்சி நகரம், விருதுநகர் AWS,, அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்) பகுதிகளில் தலா 6 செ.மீ மழைப்பதிவு, உப்பாறு அணை (திருப்பூர்), கல்லிக்குடி (மதுரை), மூலனூர் (திருப்பூர்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தொடர்வதற்கு எதிரான வழக்கு; ஒத்தி வைத்த உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details