இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் " தமிழ்நாடு, புதுச்சேரியில் பருவமழை வலுவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழையும், குன்னூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகிவுள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், இலங்கை, தென் தமிழக கடல் உள்ளிட்டப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவிவருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழ்நாட்டில் பரவலாகவும், வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நாளை, நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள், தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க: மழைவெள்ளம் பாதித்த இடங்களில் கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு!