சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று (நவ.6) இரவு தொடங்கிய மழை விடிய விடியக் கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகள், குடியிருப்புகள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது. விடாமல் பெய்து வரும் கனமழை மேலும் மூன்று மணி நேரத்திற்குத் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக சென்னை காவல்துறைத் தலைவர் அலுவலகம் அமைந்துள்ளபகுதியில் 226.80 மி.மீ, அம்பத்தூர் 205 மி.மீ , நுங்கம்பாக்கத்தில் 158.90 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு