தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீரில் தத்தளிக்கும் வேளச்சேரி - இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பொதுமக்கள் அவதி

கனமழை காரணமாக வேளச்சேரியில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மழை
மழை

By

Published : Nov 13, 2022, 10:28 PM IST

சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரியில் 175வது வார்டில் நேருநகர், காமராஜர் தெரு, பெரியார் நகர், நேதாஜி ரோடு என அனைத்து பகுதிகளிலும் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. அதேபோல் 176ஆவது வார்டில் ஏஜிஎஸ் காலனி 8வது மெயின் ரோடு, 6ஆவது குறுக்கு தெரு, 3ஆவது பிரதான சாலை உள்ளிட்ட 8 தெருக்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கூட வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சாலை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மழை நீரில் தத்தளிக்கும் வேளச்சேரி

மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களும் ஆங்காங்கே மூடப்படாமல் இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மோட்டார் வைத்து நீரை வெளியேற்றி வந்தாலும், வேளச்சேரியில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

இதையும் படிங்க: Rain Update: 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details