இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், 'தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக தருமபுரி, நாமக்கல், ஈரோடு, சேலம், நாகை, தஞ்சை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.