14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் - கடலூர் மழை
அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், தேனி, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள காணொலியில், வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும்; கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்) புதுச்சேரி, கடலூர் தலா 19, மணிமுத்தாறு (திருநெல்வேலி), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 10, பாபநாசம் (திருநெல்வேலி) 8, சேர்மாதேவி (திருநெல்வேலி), பரங்கிப்பேட்டை (கடலூர்), புவனகிரி (கடலூர்) தலா 7, குன்னூர் (நீலகிரி) 6, சூளகிரி (கிருஷ்ணகிரி), மரக்காணம் (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்) தலா 5, ஊத்துக்குளி (திருப்பூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சங்கரி துர்க் (சேலம்), பழனி (திண்டுக்கல்) தலா 4 செ.மீகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிக்க:கனமழையால் குளம்போல் காட்சியளிக்கும் புதுச்சேரி சாலைகள்