இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் - ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்
சென்னை: புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
![6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் heavy rain expected](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:45:43:1604826943-tn-che-02-imd-update-script-7202287-08112020144430-0811f-1604826870-793.jpeg)
அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, டிஜிபி ஆபீஸ் (சென்னை) 10, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), கும்மிடிப்பூண்டி(திருவள்ளூர்), சிதம்பரம் AWS (கடலூர்) தலா 6, செங்குன்றம் (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்), அண்ணா யூனிவர்சிட்டி ARG (சென்னை) தலா 5, ஆலந்தூர் (சென்னை), காயல்பட்டினம் (தூத்துக்குடி), பரங்கிப்பேட்டை(கடலூர்), சிதம்பரம் (கடலூர்) தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.