குடியரசு தினத்தன்று பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்டர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த காவல் துறை டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, நாளை(ஜன-26) தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.